நெல்லையில் தடையை மீறி பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்த முயன்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சரத் கட்சி..இந்த நிலைமைக்கு போயிட்டதா ?? வேற method தெரியலையாக்கும்!!
Thursday, March 13, 2008
பிச்சையெடுக்கும் போராட்டம்: சரத் கட்சியினர்
அமெரிக்க விசா மோசடி : நடிகர் விவேக் & டைரக்டர் ஷங்கர் ??
அமெரிக்காவுக்கு ஆட்களைக் கடத்திய விவகாரத்தில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த முக்கிய சிரிப்பு நடிகரும், முக்கிய இயக்குநர் ஒருவரும் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பான பட்டியலை அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள், சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் வழங்கியுள்ளனர்.
தனது மேக்கப் உதவியாளர் என்ற போர்வையில் ஸ்ரீலதா என்ற ஆந்திரப் பெண்ணை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல அமெரிக்க துணைத் தூதரகத்தில் விண்ணப்பித்து சிக்கியுள்ளார் நடிகை புளோரா. பணம் பெற்றுக் கொண்டு ஸ்ரீலதாவை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து புளோரா, ஸ்ரீலதா, புரோக்கர் வெங்கட் ரெட்டி ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து திரையுலகுக்கு அடுத்த அடியைக் கொடுத்தது அமெரிக்க துணைத் தூதரகம். தென்னிந்தியாவைச் சேர்ந்த 200 நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் நிரந்தரமாக அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க தூதரகம் அறிவித்தது.
இவர்கள் அனைவரும் ஆள் கடத்தில் ஈடுபட்டுள்ளதாகவம், எனவே இனிமேல் இவர்கள் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அமெரிக்க துணைத் தூதரக் டேவிட் ஹாப்பர் அறிவித்தார்.
இந்தத் தடை உத்தரவைக் கேட்டு தமிழ்த் திரையுலகினர் அதிர்ந்து போயுள்ளனர். யார் பெயர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்ற ஆர்வம் அவர்களிடையே எழுந்துள்ளத.
இந்த நிலையில் முக்கிய நடிகர், நடிகைகள் பத்து பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அமெரிக்க துணைத் தூதரகம், சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் வழங்கியுள்ளது.
இந்தப் பட்டியலில் முதல் நபராக முக்கிய சிரிப்பு நடிகரின் பெயர் இடம் பெற்றுள்ளதாம். படங்களில் தத்துவத்தையும், உபதேசத்தையும் அதிகம் போதிப்பவர் இந்த நடிகர். மூடப் பழக்க வழக்கங்களையும், முட்டாள்தனங்களையும் சரமாரியாக விளாசுவது இவரது வழக்கம். ஆனால் இவரே வாஸ்து பார்த்துதான் புது வீடு கட்டியதாக கூறுவார்கள்.
ஆனால் அவரே இப்போது ஆள் கடத்தல் மோசடியில் சிக்கியுள்ளாராம். இவர் சமீபத்தில் பலருடன் அமெரிக்கா சென்றார். அவர் கூட சென்ற யாருமே திரும்ப வரவில்லையாம். எனவே அத்தனை பேரிடமும் பணம் வாங்கிக் கொண்டு இவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் இந்த நடிகர் பலமுறை அமெரிக்கா போயுள்ளாராம். போகும்போதெல்லாம் கூடவே சிலர் அவருடன் செல்வார்களாம். எனவே இந்த நடிகரை மிகப் பெரிய அளவில் விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்க தூதரகம், காவல்துறை ஆணையரை வலியுறுத்தியுள்ளதாம்.
பிரமாண்ட இயக்குநரும்!
இதேபோல முக்கிய இயக்குநர் ஒருவரும் இந்தப் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர் ஒரு பிரமாண்ட இயக்குநர். பிரமாண்டமான பட்ஜெட்டில்தான் படமே எடுப்பார்.
இவர் மீதும் ஆள் கடத்தல் சர்ச்சை எழுந்துள்ளது. லேட்டஸ்டாக இவர் கொடுத்த ஹிட் படத்தின் ஷூட்டிங்குக்காக அடிக்கடி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது கூடவே சிலரும் சென்றனராம். ஆனால் அவர்கள் திரும்பி வரவில்லையாம். இவர் குறித்தும் விசாரிக்குமாறு அமெரிக்க தூதரகம் காவல்துறையை கேட்டுக் கொள்ளும் என்று தெரிகிறது.
அமெரிக்க துணைத் தூதரகம் கொடுத்துள்ள பட்டியலில் உள்ள நடிகர், நடிகைகள் குறித்த புகார்களை முதலில் ரகசியமாக விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. அதில் உண்மை இருந்தால் நேரடியாக அழைத்து விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் விசாரணையை விரைவாக மேற்கொள்ளுமாறும், தவறு செய்தவர்கள் மீது கடும் தண்டனை எடுக்குமாறும் அமெரிக்க துணைத் தூதரகம் காவல்துறையை வலியுறுத்தியுள்ளது.
Monday, March 10, 2008
இந்திய ஹாக்கி அணிக்கு பெரிய அவமானம்!*ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறாமல் தலைகுனிவு

இந்திய அணியின் ஒலிம்பிக் கனவு பறிபோனது. ஹாக்கி ரசிகர்களின் ஆர்வம், ஆனந்தம் அத்தனையும் வீரர்களின் பொறுப் பற்ற ஆட்டத்தால் வீணானது.
ஒலிம்பிக் வாய்ப்பை நிர்ணயிக்கும் மிக முக்கியமான போட்டியில் இந்தியா 0-2 என இங்கிலாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. கடந்த 80 ஆண்டுகளில் 8 முறை சாம்பியன் பட்டம் வென்ற நம் ஹாக்கி அணி, தற்போது முதன் முறையாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற முடியாமல் போனது. தேசிய விளையாட்டு தேய்ந்து வருவதால் பொதுமக்களின் கோபத்துக்கும் ஆளாகியுள்ளது.
உலக கோப்பை மற்றும் தோகா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி மோசமாக விளையாடியதால் 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது. இதையடுத்து தகுதி சுற்று தொடரில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. நேற்று அதிகாலையில் நடந்த பைனலில் இந்தியா, இங்கிலாந்தை எதிர் கொண்டது.
இங்கிலாந்து துவக்கத்திலே சூப்பராக விளையாடியது. பேரி மிடில்டன் ஆட்டத் தின் 4வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். 10வது நிமிடத்தில் ரிச்சர்ட் மேன்டெல் கோல் வித்தியாசத்தை அதிகரித்தார். முதல் 10 நிமிடங்களுக்குள் இங்கிலாந்து இரண்டு கோல் அடித்துவிட இந்திய வீரர்களுக்கு நெருக்கடி அதிகரித்தது.
இந்நிலையில் சர்தரா சிங் மற்றும் `சூப்பர் பார்மில்' இருக்கும் பிரப்ஜோத் சிங் ஆகியோருக்கு `எல்லோ கார்டு' வழங்கப்பட்டது இந்திய அணிக்கு பேரிடியாக அமைந்தது. இவர்கள் இருவரும் வெளியேற, மற்ற வீரர்கள், தங்கள் விளையாடும் நிலைகளை கொஞ்சம் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது வீரர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
தவறிய வாய்ப்புகள்: முதல் பாதியின் இறுதியில் (31 வது) கிடைத்த அருமையான பெனால்டி வாய்ப்பை ரகுநாத் தவறவிட்டார். முதல் பாதியின் முடிவில் இங்கிலாந்து 2-0 என்ற முன்னிலையில் இருந்தது. 47வது நிமிடத்தில் அடுத்த பெனால்டி வாய்ப்பை திலீப் டிர்கே நேரடியாக இங்கிலாந்து கோல் கீப்பரை நோக்கி அடித்து, ஏமாற்றினார். இதை தொடர்ந்து கிடைத்த மூன்று பெனால்டி வாய்ப்புகளையும் இந்திய வீரர்கள் கோட்டைவிட்டனர். இக்னேஸ் டிர்கே தன் பங்கிற்கு இரண்டையும், சிவேந்திரா சிங் ஒரு வாய்ப்பையும் தவறவிட் டனர்.
இந்திய முன்கள வீரர்கள் அனைவரும் பொறுப்பில்லாமல் விளையாடிய போதும், கோல் கீப்பர் பல்ஜீத் சிங் இங்கிலாந்து வீரர்கள் அடித்த மூன்று பெனால்டி கார்னர்களை தடுத்து இந்திய அணியின் மானத்தை காப்பாற்றினார். இந்திய வீரர்கள் ஒரு பந்தைக்கூட சரியாக பாஸ்' செய்யவில்லை. வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாட தவறியதாலும், சரியான திட்டமிடல் இல்லாததாலும் ஹாக்கி வரலாற்றில் முதன் முறையாக இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.
சக்க்தே இந்தியா இல்ல....நக்குதே இந்தியா....
கிரிக்கெட்டுக்கு செலவு பண்ணுற காசுல பாதி பண்ணாக்க போதும்..யாரு கேக்குறா ??
டி ஆரும்.. பருத்தி வீரனும்...
பருத்தி வீரன் படத்தைப் பார்த்த பிறகு, இனி நல்ல படங்களை மட்டுமே தரவேண்டும் என்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாக வெளிப்படையாகத் தெரிவித்தார் ராஜேந்தர்.
இதன் விளைவு, பிரமாண்ட செட், அடுக்குமொழி வசனங்கள், ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் எம்பிக் குதிக்கும் சண்டைகள் எதுவும் இல்லாத இயல்பான சினிமா ஒன்றை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். அந்தப் படத்துக்கு ஒருதலைக் காதல் என்று தலைப்பும் வைத்துள்ளாராரம்.
டி.ஆர். சார், ஒரு சின்ன திருத்தம். பேசாமல் படத்திற்கு 'ஒரு தலைக் கரடி' என்று பெயர் வைத்திருக்கலாம்.
இதுகுறித்து சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜேந்தர் கூறியதாவது:
லட்சுமி மூவி மேக்கர்ஸ், சிம்பு சினி ஆர்ட்ஸுடன் இணைந்து புதிய படம் தயாரிக்கவுள்ளது. `ஒருதலைக் காதல்' என்று பெயர் வைத்திருக்கிறேன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறேன். இதில் குறளரசன் நாயகனாக நடிக்கவில்லை.
நான்தான் நாயகன். மேலும் பல புதுமுகங்கள் இப்படத்தில் அறிமுகமாகப் போகிறார்கள்.
இது கிராமத்துக் காதல் கதை. என்னுடைய 25 வருட சினிமா வாழ்க்கையில் செட் போடாமல் இந்தப் படத்தை எடுக்கப்போகிறேன். இதில் கருப்பசாமி என்ற கிராமத்து மனிதராக வேடம் எனக்கு.
இந்தப் படத்தை எனக்கு தூண்டுதலாக அமைந்தது அமீரின் `பருத்தி வீரன்' திரைப்படம்தான். அந்தப் படத்தின் பாதிப்பிலிருந்து மீண்டு வரவே பல நாட்களாயிற்று. எடுத்தால் இப்படிப்பட்ட அர்த்தமுள்ள இயல்பான படங்களைத்தான் இனி எடுப்பது என்ற முடிவுக்கே வந்துவிட்டேன்.
பருத்திவீரனைப் பார்த்த பிறகு மனம் மாறி ஒரு கிராமத்துப் படம் எடுக்கிறேன் என்று நான் சொன்னதால் எனக்கு எந்தவித குறையும் வந்துவிடவில்லை. பெருமைப்படுகிறேன்...என்றார் ராஜேந்தர்.
இவருதான்யா ஒரிஜினல் இம்சை அரசன்!
மரம் நடும் ராமதாஸ் !!
ஈரோடு மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்கத்தின் சார்பில் உறுதிமொழி ஏற்பு மாநாடு நடைபெற்றது. இதில், ராமதாஸ் பேசுகையில்,
- இந்தியாவில் ஒருவன் தினமும் ஒரு மரம் நட்டுக்கொண்டு இருக்கிறான். அவன் யார் என்று உங்களுக்கு தெரியுமா? அது நான்தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். திண்டிவனம் மாவட்டத்தில் கோனேரிப்பட்டி கிராமத்தில் தினமும் ஒரு மரத்தை நட்டு வருகிறார் ராமதாஸ்.
- நமது நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளான சடுகுடு, சிலம்பம் ஆகியவற்றை மறந்து மட்டைப் பந்து எனப்படும் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். நான் ஒரு கால்பந்து வீரன், சத்தியமாக எனக்கு கிரிக்கெட்டை பற்றி எதுவும் தெரியாது.
- வரும் கல்வி ஆண்டிலேயே பள்ளிகளில் தமிழ் வழி கல்வியை 100 சதவீதம் கொண்டு வரவேண்டும். அதை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் கல்வி கொள்ளையர்களை உதைக்க வேண்டும்.
Sunday, March 9, 2008
முதலில் அழைப்பு ... பின்னாடி ஆப்பு.. (பா.ம.க வின் சோகக்கதை)
தகவல் உபாயம் : பா. ம. க பிரமுகர் ?
எப்போது பார்த்தாலும், கலைஞரின் புறத்தையே நோண்டிக்கொண்டிருக்கும், ராமதாசு..இந்த முறை தனது மகள் கவிதாவுக்கு ராஜ்ய சபா எம். பி சீட் வாங்கி கொடுத்து மத்திய மந்திரியாக்கும் முயற்ச்சியில், தி.மு.க வுக்கு நெருக்கடி கொடுத்தது தெரிய வந்துள்ளது...
கலைஞரின் அரசியல் சாணக்கிய தனத்துக்கு முன், ராமதாசு ஒரு தூசு..அரசியலில் என் குடும்பத்தை ஈடு படுத்த மாட்டேன் என்று சூளுரைத்து விட்டு, ஒவ்வொரு காயை யும் நகர்த்தி வரும் இவர் செய்வது, வன்னிய மக்களுக்கு பச்சை துரோகமே...
இவ்வளவு நாள் கலைஞரை நேரில் சந்திக்காதவர் சில நாட்களுக்கு முன் சந்தித்து காரியமாகத் தானோ ??
ஆயினும், ராஜ்ய சபை எம்.பி சீட்டு விவகாரத்தில் முடிவை தி.மு.க காங்கிரச்சிடம் விட்டு விட்டதாகத் தெரிகிறது....
ஜெ வின் பிரசார கூட்டங்களில் நடப்பவை....புகைப்பட வடிவில்...நன்றி : தினகரன்.
இவர்கள் தான் நம் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள், மந்திரிகள், எம். எல். ஏக்கள்..வளரும் நமது இளைய சமுதாயத்தின் வழிகாட்டிகள்....?????
வெட்கம், மானம், சூடு, சொரணை இதில் எதாவது இவர்களுக்கு இருக்குமா ? ஒட்டு போடுங்க, என்னைக்குத்தான் ஜனங்க திருந்துமோ ??






இவரு கிட்டே இருந்து கத்துகுங்க...எப்படி கும்பிடு போடணும், எந்த அயிட்டதுக்கு (லாரி, வேன், டயர், நட்டு போல்டு...)
இதுக்கு முகப்பே வேணாம் !! பின்னால பொத்தி இருந்தாக்க இன்னமும் சூப்பர் ஆக இருந்திருக்கும்...